
இதனிடையே கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் தன்னுடைய வீட்டில் திடீரென மரணமடைந்தார்.
இவரது மரணம் உலகத்தையே உலுக்கியது. ஜாக்சனின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவரது குடும்ப டாக்டர் முர்ரே மீது சந்தேகம் இருப்பதாகவும் ஜாக்சனின் குடும்பத்தினர் தெரிவித்து வந்தனர். இதனையடுத்து ஜாக்சனின் குடும்ப டாக்டர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. வழக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கோர்ட்டில் நடைபெற்று வந்தது.ஜாக்சனின் இறப்பு குறித்த விசாரணையில் மன அழுத்தத்தி்ல் தவித்து வந்த ஜாக்சன் அளவுக்கு அதிகமாக தூக்கமாத்திரை சாப்பிட்டதால் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப் பட்டது.
தொடர்ந்து டாக்டர் முர்ரே ஜாக்சனை கருணை கொலை செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து நீதிபதி மைக்கேல் பாஸ்டர் டாக்டருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.மேலும் ஜாக்சனின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
0 கருத்து:
கருத்துரையிடுக