புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சவூதி அரேபியாவில் கொலை செய்து புதைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இலங்கைப் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரேபிய செய்திகளை மேற்கோள் காட்டி இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.அநுராதபுரத்தைச் சேர்ந்த 44 வயதுடைய சித்ரா ரணசிங்க  என்ற பெண்ணே இவ்வாறு  கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவருடைய சடலம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மற்றுமொரு இலங்கைப் பெண்ணுக்கு சொந்தமான ரியாத்திலுள்ள வீட்டு வளாகத்திலேயே புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து வீடொன்றில் பணிப்பெண்ணாக கடமையாற்றும் குறித்த வீட்டிற்குச் சொந்தமான பெண்ணும் உணவு விடுதியொன்றில் சமையல்காரராக பணியாற்றும் அவரது கணவரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். 

கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் பெண்ணும் சந்தேக நபர்களும் அநுராதபுரத்தைச் சேர்ந்தவர்களெனவும் இவர்கள் ஒரேயிடத்தில் பணியாற்றி வந்தவர்களெனவும் தெரிவிக்கப்படுகிறது. கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் பெண்ணின் கணவரும் மகனும் மதுபானம் தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் தற்போது சவூதி அரேபியாவில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். 

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கருத்துக் கூற மறுத்துள்ள தூதரக அதிகாரிகள், இது தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இப்பெண்ணின் இலங்கையிலுள்ள மற்றுமொரு மகன், மரணச்சடங்குகளை மேற்கொள்வதற்காக தாயாரின் சடலத்தை இலங்கைக்கு அனுப்பிவைக்குமாறு தூதரகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தூதரக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top