புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இன்றைய நவீன உலகில் மனிதர்கள் அங்கும், இங்கும் ஓடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். வேலைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.ஆதலால் தங்களது உடல்நிலையை சரியாக பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதில்
அதிகம் பேர் சந்திக்க கூடிய பிரச்னைகளில் ஒன்று கழுத்து வலி.

தங்களது உடல்நிலையில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.

கடைபிடிக்க வேண்டியவைகள்: கார் ஓட்டும் போதும், சரியான முறையில் அமர்வது அவசியம். சாலையில் பார்வை நன்றாகப்படும் வகையிலும், கழுத்தை அதிகமாக வளைக்காத வகையிலும் அமர உங்கள் சீட்டை சரிசெய்து கொள்ளுங்கள்.

கழுத்து வலிக்கு முக்கிய காரணம் சரியான முறையில் அமரும் பழக்கம் இல்லாதது தான். தவறான முறையில் அமர்ந்திருப்பது, நமக்கே தெரியாமல் நிகழ்ந்து விடுகிறது.

படுக்கையில் படுத்தபடி புத்தகம் படிப்பது கூட வலியை ஏற்படுத்தி கழுத்தைப் பதம் பார்த்து விடும். இந்த பிரச்னையை மிக எளிதாகக் கையாளலாம்.

கழுத்தை சாதா நிலையில் எப்போதும் வைத்திருந்தால் போதும். அதாவது வெகு நேரம் கழுத்தை வளைத்தபடி இருக்க வேண்டாம். ஒரே கோணத்தில் வெகு நேரம் அமர்ந்திருப்பதையும் தவிர்க்க வேண்டும்.

வெகு நேரம் அமர நேர்ந்தால் சரியான முறையில் அமர்ந்துள்ளீர்களா என்பதை சரிபார்க்க வேண்டியது அவசியம். கழுத்து நேராகவும், முதுகுப் பகுதியைத் தாங்கக் கூடிய தலையணை பொருத்தியும் அமர வேண்டும்.

இடுப்புக்கு சற்றே கீழாக முட்டி இருக்குமாறு அமர வேண்டும். நாற்காலியின் கைப்பிடியில் கைகளை வைத்திருப்பது நல்லது. தூங்கும் போது சரியான முறையில் படுக்காமல் இருந்தாலும் கழுத்து வலி ஏற்படும்.

போம் தலையணைகளை விட, இறகால் ஆன தலையணைகள் மிகச் சிறந்தவை. அவை தான் கழுத்து, தலைக்கு ஏற்றவாறு வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டவை.

கணணி முன் மணிக்கணக்காக அமர்ந்து பணிபுரிவோர், கழுத்தை சாதாரண  நிலையில் வைத்து அமர்வது தான் நல்லது. சிலர் வேலையில் அதீத கவனம் செலுத்தும்போது கழுத்தை முன்னோக்கி நகர்த்தி வைத்துக் கொள்வர்.

நெடுநேரம் இப்படி வைத்திருந்தால் கழுத்தில் வலி ஏற்படும். நாள்பட்ட இந்த பழக்கம் கழுத்தில் பாதிப்பை ஏற்படுத்தி விடும். கழுத்தை சரியான முறையில் வைத்திருப்பதற்கு ஏற்ப உங்கள் டேபிள், மொனிட்டர், நாற்காலி ஆகியவற்றை சரியான கோணத்தில் வைத்திருப்பது அவசியம்.

சிலர் காலுக்கு உயரம் குறைந்த பெஞ்ச் போட்டு அமர்வது வலி ஏற்படுவதைத் தவிர்க்கும் எனக் கூறுவர். இதையும் நீங்கள் செய்து கொள்ளலாம். கழுத்தை முன் பக்கமாக நீட்டுவதைத் தவிர்க்க, கணணி மொனிட்டரை முகத்திற்கு அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.

வெகு அருகில் வைத்துக் கொண்டால் பார்வை கெடும், அதிலும் கவனமாக இருக்க வேண்டும். நாற்காலியின் கைப்பிடி மீது கை வைத்து அமர்வதும் அவசியம். தேவைப்பட்டால் கண்ணாடி அணிந்து கொள்ளலாம்.

வலி ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது? கழுத்தில் ஐஸ் கட்டி, சூடு ஒத்தடம் ஆகியவற்றை மாறி மாறி வைத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலான உடலியல் சிகிச்சை நிபுணர்கள் ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுப்பதற்கு முன்னுரிமை தருகின்றனர். இதில் வலியும், வீக்கமும் சீக்கிரம் குறையும். நாற்பது நிமிட இடைவெளியில் 15-20 நிமிடங்கள் ஐஸ் ஒத்தடம் கொடுப்பது நல்லது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top