புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கீழே குனிந்து பார்த்தால் நடுநடுங்கும் அதல பாதாளம், கண்ணாடிப் பாதை நடந்து சென்றால் எப்படி இருக்கும். 1400 மீட்டர் ஆழமானது. இது சீனாவின் Tianmen மலை. 60 மீட்டர் நீளத்துக்கு போடப்பட்டுள்ள இந்தக் கண்ணாடிப் பாதையால்.நடந்து செல்ல சுற்றுலாப் பயணிகள்
நடுநடுங்குகிறார்கள். பெண்ணொருவர் அடிமேல் அடி வைத்து பயத்துடன் நடந்து செல்வதை படத்தில் பாருங்கள். வருகின்ற பார்வையாளர்கள் காலணி அணிந்து தான் வர வேண்டுமாம்.'நிச்சயமாக இந்த கண்ணாடி பாலம், பலவீனமான இதயம் உள்ளவர்களுக்காக செய்யப்பட்டதல்ல.' - என்கிறது மெயில் ஆன்லைன்.
சீனாவின், ஷாங்கியேஜி எனும் இடத்தில் உள்ள டியன்மென் மலைத்தொடரில் பாறைகளோடு ஒட்டியவாறு (Tianmen Mountain) கடல் மட்டத்திலிருந்து 4700 அடி உயரத்தில் புதிதாக கட்டப்பட்டிருக்கிறது இந்த கண்ணாடி பாலம். 200 அடி நீளமான இக்கண்ணாடி பாலம், யுன்மெங் ஃபேரி எனும் மறுமுனை உச்சிக்கு செல்கிறது.

இப்பாலத்தின் கீழ்ப்பகுதியும்,சுற்றிபாதுகாப்புக்காக கட்டப்பட்டிருக்கும் பகுதியும் முழுக்க முழுக்க கண்ணாடியினால் உருவாக்கப்பட்டது. பாதுகாப்பானது தான தெரிந்திருந்தும், பாலத்தில் கால் வைப்பவர்கள் நிம்மதியாக நடந்து செல்ல மாட்டார்கள். தப்பித்தவறி தலை குனிந்து கீழே
பார்த்தால் விவகாரம் தான்.
போதாத குறையாக, துப்பரவு பணியாளர்கள் இந்த கண்ணாடி பாலத்தை எந்நேரமும் துடைத்து அடிக்கடி தூய்மைப்படுத்தியும் விடுகிறார்களாம்.சாந்தை

இந்த பாலம் அமைந்திருக்கும் மலைத்தொடருக்கு சூட்டப்பட்டிருக்கும் Tienmen என்ற பெயருக்கு சொர்க்கத்தை அடையும் நுழைவாயில் என்று அர்த்தமாம். செல்வதற்கு யார் தயாராக இருக்கிறீர்கள்?

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top