புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியா -ராஜஸ்தான் மாநிலம் பிகானர் நகரைச் சேர்ந்தவர் சங்கர் லால். அசாமில் வியாபாரம் செய்து வரும் இவர், திருமண தகவல் இணையதளத்தை தொடர்பு கொண்டு தனக்கு பொருத்தமான
மணமகளைத் தேடினார். இவ்வாறு தொடர்பு கொள்ளும்போது, பிகானரைச் சேர்ந்த சீமா என்ற பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் சமூக வலைத்தளம் மூலம் நட்பை வளர்த்தனர்.

இந்நிலையில் சங்கர், சீமாவைத் திருமணம் செய்ய விரும்புவதாக தெரிவித்தார். சீமாவும் இதற்கு சம்மதித்தார். இதையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன், கடந்த 26-ம் தேதி இருவரும் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டனர்.

ஆனால், இந்த திருமண உறவு ஒரு நாள் மட்டுமே நீடித்தது. இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சீமா, தன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவரது பெற்றோர், சங்கர் மீது கற்பழிப்பு புகார் கொடுத்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.

சங்கரும் பதிலுக்கு பெண் வீட்டாரை மிரட்டினார். அத்துடன் தன்னை சீமாவும், அவரது குடும்பத்தினரும் ஏமாற்றி விட்டதாக காவல் நிலையத்தில் 27-ம் தேதி புகார் அளித்தார். இதனால் இரு தரப்பினருக்குமிடையே பிரச்சினை உருவானது. பின்னர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது பிரச்சினை இன்றி பிரிவதற்கு கணவன்-மனைவி இருவரும் ஒப்புக்கொண்டனர். மேலும் தங்களின் திருமணம் செல்லாது என்று எழுதி கையெழுத்து போட்டு கொடுத்தனர். இதையடுத்து சங்கர் தனது புகாரை வாபஸ் பெற்றார்.

இணையதளத்தின் மூலம் அறிமுகமாகி இல்லற வாழ்வில் இணைந்த சங்கர்-சீமா ஜோடி, மறுநாளே பிரிந்து தனித்தனியாக சென்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top