புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

துணி துவைக்கும் இயந்திரத்தினுள் வைத்துக் கொல்லப்பட்ட Bastien எனும் 3வதுச் சிறுவனுக்காக அவனது பாடசாலை மாணவர்களும் அயலவர்களுமாகச் சேர்ந்து 'உன்னை நாங்கள் இழந்து தவிக்கின்றோம் , உன்னை நாம் மிகவும் விரும்பினோம், உன் இழப்பில் நாம் துயரடைகின்றோம் '

போன்ற வரிகளைத் தாங்கியபடி அமைதியாக நடந்தனர். கடந்த 25 நவம்பர் அன்று தந்தையினால் துணி துவைக்கும் இயந்திரத்தினுள் வைத்துக் கொல்லப்பட்ட Bastien எனும் 3வதுச் சிறுவனுக்காக அவனது பாடசாலை மாணவர்களும் அயலவர்களுமாகச் சேர்ந்து ஒரு அமைதி நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

200 பேர்களுக்கு மேல் கலந்து கொண்ட இந்த அமைதி நடையும் ஒன்றுகூடலும் Bastien படித்த சிறுவர் பாடசாலையின் பெற்றோர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கைகளில் ரோஜாக்களோடும் நெஞ்சங்களில் வலிகளோடும் அந்தக் கூட்டம் வீதியில் வலம் வந்தது.

´´உன்னை நாங்கள் இழந்து தவிக்கின்றோம், உன்னை நாம் மிகவும் விரும்பினோம், உன் இழப்பில் நாம் துயரடைகின்றோம்´´போன்ற வரிகளைத் தாங்கியபடி அமைதியாக நடந்தனர். அவர்கள் அணிந்திருந்த வெள்ளை உடைகளில் Bastien படம் அச்சிடப்பட்டிருந்தது.

Germigny-l'Evêque கிராமத்து மக்கள் நடைபயணத்தின் முடிவில் வெள்ளை ரோஜாக்களையும் தமது கவலைகளின் வெளிப்பாட்டையும் Bastien இன் வீட்டின் முன் உள்ள கம்பி மதிலின் மேல் வைத்தனர்.

அதில் Bastien இன் பெரிய படமும் வைக்கப்பட்டிருந்தது. அயலவர்களும் சிறுவர்களும் கண்ணீர் வடித்தபடி கொடுமைகளுக்கு உள்ளாகிக் கொல்லப்பட்ட அந்தச் சிறுவனுக்கு அஞ்சலி செலுத்தினர். கொல்லப்பட்ட சிறுவனின் தாயும் தந்தையும் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.



0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top