புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வானிலையை ஆய்வு செய்து தகவல்களை சேகரிக்கும் செயற்கைக்கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. பெங்கியூன்-2 என்ற இந்த செயற்கைக்கோள் வானிலை, நீர் வளம் குறித்தத் தகவல்களை சேகரிக்கும் என்று அந்நாட்டின் செய்தி நிறுவனம்
தெரிவித்துள்ளது.ஷாங்காய் விண்கலத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைகோள், லாங் மார்ச் 3ஏ என்ற ஏவுகணை மூலம் ஜிசாங் ஏவுகணைத் தளத்திலிருந்து வெள்ளிக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த ஏவுகணையை சீன ஏவுகணைத் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் தயாரித்துள்ளது. 157வது முறையாக இந்த ரக ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளதாக சீன அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top