புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


செவ்வாய் கோளின் ஆராய்ச்சிக்காக ரஷ்யா செலுத்திய Phobos Grunt என்ற விண்கலம் எதிர்வரும் 15ம் திகதியன்று இந்திய பெருங்கடலில் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்கலம் விழப்போகும் இடம், நேரம் போன்றவற்றை விழுவதற்கு.24 மணி நேரத்துக்கு முன்பு தான் கணித்துச் சொல்ல முடியும்
என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 13.5 டன் எடையுள்ள இந்த விண்கலம் கடந்தாண்டு நவம்பர் மாதம் 9ம் திகதி செவ்வாய் கோளின் சந்திரன்களில் பெரியதாக இருக்கும் போபோசுக்கு அனுப்பப்பட்டது.

இன்னும் செலுத்திய பாதையிலேயே சுற்றி வரும் இந்த விண்கலம் அதன் மேற்பகுதியை மேல் நோக்கி செலுத்த இயலாததால் காற்று மண்டலத்திற்குள் புகுந்து கடலில் விழப்போகிறது. இந்த விண்கலத்தைச் செயல்படவிடாமல் சில அந்நிய சக்திகள் செயல்பட்டதாக ரஷ்ய விஞ்ஞானிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ரஷ்யா அனுப்பும் விண்கலங்கள் ஒரு நிழற்பகுதியை அடையும் போது, அதிலிருந்து எந்தத் தொடர்பும் இருக்காது. அப்போது அந்த விண்கலத்தில் ஏதேனும் மாற்றம் செய்யப்படுகிறதா என்பது குறித்து ரஷ்ய விஞ்ஞானிகளுக்குத் தெரியவில்லை. இந்தத் தகவல் தடையும், நிழற்பகுதியும் எப்படி ஏற்படுகின்றன என்பதும் புரியவில்லை.

இதனால் தான் அந்நியச் சக்திகளின் ஊடுருவல் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இன்றைய தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு விண்கலத்தின் சில பகுதிகளின் செயற்பாட்டை நிறுத்திவிட முடியும், அப்படித்தான் மேல்நோக்கிச் செலுத்தத் திட்டமிட்ட விண்கலத்தின் மேற்பகுதியை செலுத்த முடியாமல் நிறுத்திவிட்டனர் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

அலாஸ்காவில் அமெரிக்காவின் ராடார்கள் அனுப்பிய ஆற்றல் மிகுந்த மின்காந்த அலைகளால் ரஷ்ய விண்கலம் செயல்படாமல் போயிருக்கும் என்று ரஷ்யாவின் முன்னாள் ஏவுகணைத் தளபதி தோல்விக்கான காரணத்தை தெரிவித்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top