புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


உடல் பருமன் உலக பிரச்னையாக இருப்பதால் இதற்கு தீர்வு காணும் விதத்தில் உலகம் முழுவதும் தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் உடல் பருமன் குறைப்பு மாத்திரையால் பிரான்சில் சுமார் 1300 பேர் உயிரிழந்துள்ள தகவல் வெளியாகி பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது. மீடியேட்டர் என்ற இதே மாத்திரை சர்க்கரை நோய்க்காகவும் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. இந்த மருந்தால் ஏற்பட்ட உயிர் பலியை அடுத்து இந்த மருந்து தற்போது அவசர கதியில் தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரான்சில் உள்ள சர்வதேச சுகாதாரம் மற்றும் மருந்தாய்வு மைய அதிகாரி மெஹ்முத் சுரேக் கூறியதாவது: கடந்த 33 ஆண்டுகளாக உரிமம் பெற்று விற்பனை செய்யப்படும் மீடியேட்டர் என்ற மருந்து சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமனை குறைப்பதற்கு மருத்துவர்களால் பெருமளவில் பரிந்துரை செய்யப்பட்டு வந்துள்ளது. இந்த மருந்தால் உயிரிழப்புகள் அதிகரிப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் நடவடிக்கைகளில் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது இந்த மருந்து உட்கொண்ட சுமார் 3,100 பேர் கடந்த ஆண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இதனால் 1,300 பேர் உயிரிழந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. எதனால் உயிரிழப்பு ஏற்பட்டது என்று தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறோம். இவ்வாறு மெஹ்முத் கூறினார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top