
வைத்திருக்கலாம் என்று முதலில் நிரூபித்தவர் அமெரிக்கரான சார்லஸ் குட்-இயர். வல்கனைஸ்ட் இறப்பர் பிறந்ததே எதேச்சையாகத்தான்.
சிறு வயது முதல் இறப்பர் மீது ஆர்வம் கொண்டிருந்த சார்லஸ் குட்-இயர், அதில் ஏதாவது சோதனைகள் செய்து கொண்டே இருந்தார். இறப்பரை எரிப்பது பலவித பொருட்களைச் சேர்ப்பது என விதவிதமாகச் சோதனை செய்து பார்த்துக் கொண்டிருந்தார்.
இறப்பரை தீயில் இடும்போது எழும் துர்நாற்றம் தாங்கவில்லை என்று அக்கம் பக்கத்தினர் பொலிஸில் புகார் செய்ய பொலிஸார் அவரைத் துரத்திய சம்பவமும் உண்டு. பின்னர் நியூயோர்க் சென்ற குட்-இயர் அங்கு ஒரு வாடகை அறையில் தனது பரிசோதனையைத் தொடர்ந்தார்.
ஒரு நாள் இறப்பரையும் கந்தகத்தையும் கலந்து குட்-இயர் ஆய்வு செய்து கொண்டிருந்த போது அது எதிர்பாராமல் அருகிலிருந்த சூடான அடுப்பின் மீது சிதறி விட்டது. பின்பு அதை குட்-இயர் எதேச்சையாக எடுத்துப் பார்த்த போது இறப்பர் அதற்குரிய பிசுபிசுப்புத் தன்மை இல்லாது ஒட்டாமல் மிருதுவாகவும் வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டதாகவும் இருந்தது. எந்தக் கடும் வெப்பத்திலும் குளிரிலும் அந்த இறப்பர் இந்தத் தன்மையை இழக்கவில்லை.
குட்-இயரின் இக்கண்டுபிடிப்பு ஒரு புதிய புரட்சியாக அமைந்தது. தனது கண்டுபிடிப்பால் குட்-இயர் பெருஞ்செல்வம் சேர்த்த போதும் பலரது சூழ்ச்சிகளால் இறுதியில் எல்லாவற்றையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்தார். கடனாளியாகவே இறந்தார்.
0 கருத்து:
கருத்துரையிடுக