புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மனிதன் மூளையில் ஏற்படும் பாதிப்பை சரிபடுத்துவது விஞ்ஞானிகளுக்கும் மருத்துவர்களுக்கும் ஒரு பெரிய சவாலாக இருந்து வருகின்றது. தற்போது கண்டறியப்பட்ட ஓர் புதிய கண்டுபிடிப்பு இதற்கு சிறந்த தீர்வாக அமையும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.மூளையில்
உள்ள செல்கள் பாதிக்கப்படும் போது அதற்கு பதிலாக புதிய செல்களை உருவாக்கி அதில் பொருத்தினால் பாதிப்பை சரி செய்து விடலாம். ஆனால் இதுவரை மூளை செல்களை எப்படி உருவாக்க முடியும் என்பதை கண்டு பிடிக்க இயலாத நிலையில் விஞ்ஞானிகள் இருந்தனர்.

ஆனால் அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள ஸ்டாண்ட்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மனித தோலில் இருந்து மூளை செல்களை உருவாக்க முடியும் என கண்டுபிடித்து உள்ளனர்.



எலியில் இருந்து இது போன்ற மூளை செல்களை உருவாக்கி இவர் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல மனித மூளை செல்களையும் உருவாக்க முடியும் என்று கண்டு பிடித்து உள்ளனர். இதன் மூலம் பக்கவாத நோய் மற்றும் மூளையால் ஏற்படும் பார்வை இழப்பை தடுக்க முடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top