புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மதுரையில் இருந்து திருச்சிக்கு சுற்றுலா சென்ற பள்ளி மாணவர்கள் பயணித்த பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 15 மாணவர்களும், 4 ஆசிரியைகளும் படுகாயமடைந்தனர். மதுரை மாவட்டம், கோ.புதூரில் உள்ள ஆர்.சி. நடுநிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள்..., திருச்சிக்கு நேற்று கல்வி சுற்றுலா
புறப்பட்டனர். இதில் 4ம் வகுப்பை சேர்ந்த 35 மாணவர்களும், 43 மாணவிகளும், 6 ஆசிரியைகளும் இருந்தனர். பஸ்சை நிலக்கோட்டையை சேர்ந்த சோலை(47) என்பவர் ஓட்டினார்.

நேற்றிரவு மதுரையில் புறப்பட்ட சுற்றுலா பஸ், இன்று அதிகாலை 4.30 மணிக்கு திருச்சியை அடுத்த விராலிமலைக்கு வந்து சேர்ந்தது. விராலிமலையை அடுத்த தண்ணீர்பந்தல்பட்டி சாலையில் சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.இதில் சிவக்குமார், யுவராஜ், அங்குசெல்வி, நிஷா, சினோகா உட்பட 15 மாணவ, மாணவியரும், ஜோசப் செல்வின்(44), லீமா(45), கஸ்தூரி(32), பாத்திமா(32) ஆகிய 4 ஆசிரியைகளும் படுகாயமடைந்தனர். பஸ்சில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்தவர்கள் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பஸ் ஓட்டுநரான சோலை, தூக்க கலக்கத்தில் பஸ்சை ஓட்டி வந்ததால் விபத்து ஏற்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து சோலையை, போலீசார் கைது செய்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top