
பதுரலிய ஹதிகல்ல பிரதேசத்தில் இன்று மாலை மின்னல் தாக்கியதில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், பொத்துஹெர பிரதேசத்தில் 34 வயதான பெண் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இந்த ஆண்டில் இதுவரையில் மின்னல் தாக்கியதில் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தற்போது கொழும்பை அண்டிய பிரதேசங்களில் மாலை வேளையில் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, இலங்கையில் கடந்த ஆண்டில் மின்னல் தாக்கியதில் 51 பேர் உயிரிழந்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக