புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஸ்காட்லாந்தில் 57 ஆண்டுகள் பழமையான மால்ட் ஸ்காட்ச் விஸ்கி பாட்டில் ரூ.46.85 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டு உலக சாதனை படைத்துள்ளது.
ஸ்காட்லாந்தின் டஃப்டவுன் நகரில் கிளென்பிடிக் டிஸ்டிலரி என்ற மது தயாரிப்பு நிறுவனம் உள்ளது. வில்லியம் கிரான்ட் அண்ட் சன்ஸ் குழுமத்துக்கு
சொந்தமானது. ஒன்றேகால் நூற்றாண்டு பழமை வாய்ந்த நிறுவனம்.பார்லி மால்ட்டை மட்டும் பயன்படுத்தி இந்நிறுவனம் தயாரிக்கும் கிளென்பிடிக் சிங்கிள் மால்ட் விஸ்கி உலகம் முழுவதும் உள்ள மது பிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

கிளென்பிடிக் மது ஆலை நிறுவனர் வில்லியம் கிரான்ட்டின் பேத்தி ஜேனட் ஷீட் ராபர்ட்ஸ் இன்னும் உயிருடன் இருக்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அவர் தனது 110வது பிறந்த நாளை கொண்டாடினார்.ஸ்காட்லாந்தில் மிக மூத்தவர் என்ற பெருமை பெற்றவர்.அவரை கவுரவிக்கும் வகையில் கிளென்பிடிக் நிறுவனத்தின் பழைய விஸ்கி பாட்டில்களை வெளியிடப்போவதாக கிளென்பிடிக் நிறுவனம் கடந்த ஆண்டு அறிவித்தது.

ஜேனட் கடந்து வந்த ஒவ்வொரு 10 ஆண்டுகளையும் நினைவு கூரும் வகையில் மொத்தம் 11 சிங்கிள் மால்ட் விஸ்கி பாட்டில்கள் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.எடின்பர்க் நகரில் உள்ள போன்ஹம்ஸ் நிறுவனம் மூலம் முதலாவது விஸ்கி பாட்டில் கடந்த டிசம்பரில் ஏலம் விடப்பட்டது. அது ரூ.37 லட்சத்துக்கு ஏலம் போய் உலக சாதனை படைத்தது.

இதைத் தொடர்ந்து, லண்டனின் ஹானரபிள் ஆர்டிலரி கம்பெனி மூலம் 2வது விஸ்கி பாட்டில் ரூ.34 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இந்நிலையில், 1955ல் தயாரான சிங்கிள் மால்ட் கிளென்பிடிக் விஸ்கி தற்போது போன்ஹம்ஸ் நிறுவனம் மூலம் ரூ.46.85 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டு முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.


மேலும் ஒரு விஸ்கி பாட்டில் இவ்வளவு அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டிருப்பது உலகிலேயே இது முதல் முறை என்று போன்ஹம்ஸ் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top