
ஸ்கூட்டர் ஒன்றில் தப்பிச் சென்றதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த துப்பாக்கிதாரிக்கு தெரிவிக்கப்படுகின்ற அதே அங்க அடையாளங்கள் உடைய ஆசாமி, இந்தப் பகுதியில் தாக்குதல் நடத்துவதென்பது கடந்த ஒருவாரத்தில் இது மூன்றாவது தடவையாகும்.
இதற்கு முன்னர் நடந்திருந்த இரண்டு சம்பவங்களில் பிரஞ்சு சிப்பாய்கள் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர், நான்காவதாக ஒருவர் மோசமாக காயம் அடைந்துள்ளார்.
தாக்குதலுக்குள்ளான அனைவருமே சிறுபான்மை இனப்பின்னணி கொண்டவர்கள். சம்பவம் நடந்த இடத்தைச் சென்று பார்த்த பிரான்ஸ் அதிபர் நிக்கோலா சர்கோஸி, நடந்தது ஒரு பெருந்துயரம் என்று குறிப்பிட்டுப் பேசியுள்ளார். பிரஞ்சு குடியரசு மீதே நடத்தப்பட்டுள்ள தாக்குதல் இது என்று அவர் குறிப்பிட்டார்
0 கருத்து:
கருத்துரையிடுக