
அமெரிக்காவை சேர்ந்த ஹார்வர்டு பல்கலைக்கழகம், குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றி ஆய்வு மேற்கொண்டது. ஆய்விற்கு ஆண்கள் மட்டுமே உட்படுத்தப்பட்டனர்.
கடந்த 22 ஆண்டுகளாக அமெரிக்கர்கள் 40 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டது. ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது,
இனிப்பு கலந்த குளிர்பானத்தை தினமும் குடிப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 20 சதவீதமும் அதிகரிக்கிறது.
இதற்குக் காரணம் குளிர்பானத்தில் கலக்கப்படும் சில ரசாயன கலவைகள்தான். குளிர்பானங்களில் பயன்படுத்தப்படும் செயற்கை இனிப்பூட்டும் பொருள்களால் உடல்நலக்குறைவு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இல்லை. அதேசமயம் தொடர்ச்சியாக குளிர்பானம் பருகி வந்தால் மட்டுமே உடல் எடை அதிகரித்து, இதயத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் வாரத்தில் இரண்டு நாள் அல்லது அதற்கு குறைவாக குளிர்பானம் எடுத்துக் கொள்ளும் நபர்களுக்கு மாரடைப்பு அபாயம் காணப்படவில்லை. இந்த ஆய்வு முடிவுகள் சர்குலேஷன் என்ற பத்திரிகையில் வெளியாகி உள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக