புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

திருமணமான பெண்கள் உடல் எடையை குறைக்க சாப்பாட்டில் கட்டுப்பாடுகளை மேற்கொள்கின்றனர். அதேபோன்று கர்ப்ப காலத்திலும் கடைபிடிப்பதால் விபரீத விளைவுகள் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அதாவது கர்ப்பிணி ஆக இருக்கும் பெண் உணவில் கட்டுப்பாட்டை மேற்கொள்வதன் மூலம் அவருக்கு குண்டான குழந்தை பிறக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. அதே நேரத்தில் அக்குழந்தையை எதிர்காலத்தில் சர்க்கரை நோய் பாதிக்கும். இது குறித்த ஆராய்ச்சியை மான்செஸ்டர் பல்கலைக் கழக நிபுணர்கள் செம்மறி ஆட்டின் மூலம் நிகழ்த்தினர்.

கர்ப்பமாக இருந்த பெண் ஆட்டுக்கு உணவு கட்டுப்பாடுகளை விதித்தனர். அந்த ஆடு கொழு கொழு வென குண்டான குட்டியை ஈன்றது. முன்னதாக, ஆட்டிக்குட்டி பிறக்கும் முன்பே அதன் மூளையை பரிசோதித்தனர். அதன் மூளை திசுக்களின் டி.என்.ஏ. மூலக்கூறுகளில் மாற்றம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.

அதுதான் குட்டிகளை கொழு கொழு வென பிறக்க செய்வது தெரிய வந்தது. அதே நேரத்தில் நன்றாக தீனி அளிக்கப்பட்ட ஆடு சாதாரண எடையுள்ள குட்டிகளை ஈன்றது. அதேபோன்று தான் மனிதர்களிலும் மாற்றங்கள் ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.எனவே கர்ப்பிணிகள் சாப்பாட்டில் கட்டுப்பாடு வைத்து கொள்ளவேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றன.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top