
புதிய வகை பாஸ்போர்ட் புத்தகங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வந்தன. வழக்கமான தோற்றத்துடன் பாஸ்போர்ட் புத்தகம் காணப்பட்டாலும் அதனுள் எலக்ட்ரானிக் சிப் இணைக்கப்பட்டிருக்கும்.
பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் பெயர், விலாசம், புகைப்படம், கைரேகை பதிவு உள்ளிட்டவை இந்த எலக்ட்ரானிக் சிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய பாஸ்போர்ட்டில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கையெழுத்து மற்றும் கைரேகை பதிவு அவசியம். 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு பெற்றோர் அல்லது காப்பாளரின் அனுமதியின் பேரில் கைரேகை பதிவு செய்யப்படுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக