புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பிரித்தானியாவிலிருந்து,தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட 36 இலங்கையர்கள் இன்று காலை விசேட விமானமொன்றின் மூலம் கொழும்பை வந்தடைந்தனர். இவர்களிடமிருந்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலங்களைப்
பதிவு செய்துவருகின்றனர்.

நாடுகடத்தப்பட்டவர்களில் 22 தமிழர்கள், 8 சிங்களவர்கள், 6 முஸ்லிம்கள் அடங்குகின்றனர். இவர்களுக்கு பாதுகாப்பாக பிரித்தானிய அதிகாரிகள் 72 பேரும் மேற்படி விசேட விமானத்தில் வந்தமை குறிப்பிடத்தக்கது...

பிரிட்டனில் புகலிடம் தேடிய பெருந் தொகை தமிழ் அகதிகள் இரகசிய விமானம் ஒன்றின் மூலம் இலங்கைக்கு கட்டாயமாக நாடு கடத்தப்படவுள்ளதாக லண்டனில் இருந்து வெளியாகும் தி இன்டி பென்டன் நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழ் அகதிகளை ஏற்றிய பி. ரி. வி. 030 என்ற இலக்கமுடைய வாடகைக்கு அமர்த்தப்பட்ட விமானம் நேற்று பிற்பகல் 2. 30 மணியளவில் லண்டன் விமான நிலையத்தின் வெளிப்படுத்தப்படாத இடம் ஒன்றில் இருந்து கொழும்புக்குப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆறு மாதங்களில் நான்கு வாடகை விமானங்களில் இலங்கைக்கு தமிழர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top