புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பில்லியனில் ஒருவருக்குத்தான் இந்நோயின் பாதிப்பு ஏற்படுமென்கின்றனர் ஆய்வாளர்கள்.இந்நோயினால் பாதிக்கப்பட்ட லி ஜிங்கிலி தனது 6 வருடங்களையும் பெரும்பாலும் வேதனையுடனேயே கழித்திருக்கின்றார்.
இவள் பிறக்கும்போதே இவளது முகத்திலும்
உடலின் 60 வீதப் பகுதியிலும் கறுப்பு உரோமம் காணப்பட்டுள்ளது. அது அப்படியே இருந்தாலும் பரவாயில்லை. தொடர்ந்தும் வளர்ந்துகொண்டிருப்பதுதான் வேதனைதருகின்றது.

இதன்காரணமாகவே அவளது பெற்றோர்கள் அவளைக் கைவிட்டுவிட்டனர். 2 வயதானபோது அவளைவிட்டு அவளது தாயார் சென்றுவிட அதன்பின்னர் தந்தையும் அவளை ஒரு குழந்தைகள் காப்பகத்தில் விட்டுவிட்டுச் சென்றவர் திரும்பிவரவேயில்லை.

அக்காப்பகம் அவளது பெற்றோரை அல்லது உறவினர்களை வந்து பொறுப்பெடுக்குமாறு பத்திரிகைகளில் அறிவித்திருந்தனர். இதன் 6 மாதங்களின் பின்னர் அவளின் ஒன்றுவிட்ட சகோதரர்கள் ஒருவரின் பாட்டனார் அவளைப் பொறுப்பெடுக்க முன்வந்தார்.

அதிலிருந்து அந்தப் பாட்டனாருடன் சீனாவின் தெற்குப் பகுதியில் அவள் வசித்துவருகின்றார்.



எனினும் தனது தோற்றத்தினால் அவள் எப்போதுமே துன்பப்படுவதாக அவர் கூறினார். பிள்ளைகள் அவளுடன் விளையாட வரப் பயப்படுகின்றனர்.

இவளது நிலைக்கான சரியான விளக்கம் என்னவென்பது தெரியவில்லையெனினும் இது Hypertrichosis Universalis என்ற அறிகுறியை ஒத்ததென்கின்றனர். இது ஒருவரின் உடல் முழுவதையும் உரோமங்களால் மூடிவிடும் என்றும் பில்லியனில் ஒருவருக்கே இது வருமென்றும் கூறப்படுகின்றது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top