புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மனைவியை கற்பழிக்க ஆட்கள் தேவை என விளம்பரம் கொடுத்த கணவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அமெரிக்காவில் உள்ள ஐடஹோ மாகாணத்தில் இரண்டு வாரங்களுக்கு முன், ஒரு பெண் அடையாளம் தெரியாத நபர் தன்னை கற்பழிக்க முயற்சிப்பதாக பொலிசுக்கு போன்
செய்தார்.

பொலிசார் வருவதற்குள், அந்த நபர் அப்பெண்ணிடமிருந்த துப்பாக்கியை பறித்துக் கொண்டு ஓடி விட்டார்.

இந்நிலையில் இதே பெண்ணிடமிருந்து பொலிசுக்கு தொலைபேசியில் அழைப்பு வந்தது. மற்றொரு நபர் என்னை கற்பழிக்க முயற்சிக்கிறார், விரைந்து வாருங்கள் என கூறினார்.

பொலிசார் சென்ற போது, துப்பாக்கி முனையில் ஒருவனை பிடித்து வைத்திருந்தார் அந்த பெண்.

பிடிபட்ட நபரிடம் பொலிசார் விசாரித்த போது, அவர் பெயர் மைக்கேல் கோம்ஸ் என்பது தெரியவந்தது. தனக்கு மின்னஞ்சல் மூலம் ஒரு விளம்பரம் வந்ததாகவும், அதில் இந்த பெண்ணின் கணவர், தன் மனைவியை கற்பழிக்க தகுந்த ஆள் தேவை என கூறியிருந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் என் மனைவி எவ்வளவு எதிர்த்தாலும், நின்று விடாதீர்கள். அவளுக்கு அப்படிப்பட்ட ஆண்களைத் தான் பிடிக்கும் என இந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த பெண்ணின் கணவரை, பொலிசார் கைது செய்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top