புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வீடியோ ஏதாவது பார்க்க வேண்டுமென்றால், அனைவரும் செல்வது யூடியூப் தளத்திற்கு தான்.பயனாளர்களுக்கு பல்வேறு வசதிகளை அளித்து வந்த கூகுள், தற்போது முகத்தை மறைக்கும்(Face Blurring) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.


இதற்கு முதலில் வீடியோ யூடியூப்பில் பதிவேற்றம் செய்தவுடன், Edit பகுதியில், Enhancement என்பதை கிளிக் செய்து, அந்த வீடியோவிற்கு கீழே Additional Features என்பதை கிளிக் செய்யவும்.

அதில் Blur All Faces என்று காட்டும். அதை கிளிக் செய்து Apply என்று கொடுத்தால் வீடியோவில் உள்ள முகங்கள் மறைக்கப்படும். மறைக்கப்பட்ட வீடியோவின் Preview-ஐயும் பார்க்கலாம்.

பிறகு மேலே Save As என்பதை கிளிக் செய்தால், முகங்கள் மறைக்கப்பட்ட வீடியோ தனியாக உருவாக்கப்படும். Save என்பதை கிளிக் செய்தால் அதே வீடியோ மாற்றப்படும்.

மேலும் வீடியோவின் தரத்தை பொறுத்து, சில நேரங்களில் வேலை செய்யாமல் இருக்கலாம் என்றும் யூடியூப் தெரிவித்துள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top