
பாடசாலை முடிந்த பிற்பாடு மாணவி ஒருவர் வீட்டுக்கு செல்ல வீதியில் நின்று இருக்கின்றார். அப்போது சைக்கிள்களில் வந்த மூன்று மாணவர்களும் இவரது மார்புகளை தொட்டு அங்கசேஷ்ட்டையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பிட்ட மாணவி பேருவளைப் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். ஆயினும் நீதிமன்றத்தில் இடம்பெற்ற அடையாள அணிவகுப்பில் மூன்று மாணவர்களையும் சரியாக அடையாளம் காட்ட மாணவி தவறிவிட்டார். சம்பவம் நடந்த நேரத்தில் தான் பதற்றமாக இருந்ததாகவும், அதனால் தன்னால் அவர்களை சரியாக அடையாளம் காட்ட முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனை அடுத்து இம் மூன்று மாணவர்களையும் பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டார்.
0 கருத்து:
கருத்துரையிடுக