புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

 

திருநெல்வேலிச் சந்தையில் காலை முதல் மாலைவரை பிச்சை எடுக்கும் ஒரு இளம் பிச்சைக்காரி இருக்கிறார். இவரைப் பார்த்து வியக்காதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள்.

காரணம நல்ல இளமையாக இருக்கும் இவருக்கு வயது 20 இருக்கலாம். நல்ல உடை அணிந்திருப்பார்.




கையில் 2 வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்றும் இருக்கும். ஆனால் அக்குழந்தை எப்போதும் தூங்கிக்கொண்டுதான் இருக்கும். இதனால் இக் குழந்தை ஒரு பொம்மை என்று எல்லாம் நீங்கள் கற்பனையில் மிதக்கவேண்டாம்.




அது உயிருள்ள ஒரு குழந்தை தான். அனால் அங்கே நடக்கும் சம்பவம் தான் பெரும் அதிர்சியாக உள்ளது. குறிப்பிட்ட இப் பெண் அருகில் உள்ள கடை ஒன்றுக்குச் சென்று அங்கே குழந்தைக்கு பிரிட்டோன் ஷிறம் என்னும் மருந்தை அடிக்கடி கொடுப்பதாக முறைப்பாடு எழுந்துள்ளது. இந்த மருந்தைக் குடித்தால் குழந்தை உறங்கிவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.




ஆனால் பாரிய பின்விளைவுகளை இம் மருந்து ஏற்படுத்தும் என்றும் சொல்கிறார்கள். இந் நிலையில் காலை முதல் இரவு வரை இக் குழந்தை தூங்கிய வண்ணமே இருப்பதாக, இதனை அவதானித்த பலர் தெரிவித்துள்ளார்கள். இதேவேளை குறிப்பிட்ட பெண் தனக்குச் சேரும் பணத்தை மாலையில் வரும் ஆண் ஒருவரிடம் கையளிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இக் குழந்தை




இவருடையது தானா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளது. இதன் காரணமாகத்தான் குழந்தை சற்று விழித்துக்கொண்டால், உடனடியாகச் சென்று பிரிட்டோன் மருந்தைக் கொடுக்கிறார் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது. குறிப்பிட்ட இளம்பெண்ணுக்கு கோப்பாய் பொலிசாரிடம் செல்வாக்கு வேறு உள்ளதாம்,




இது தொடர்பாக கோப்பாய் பொலிசாரிடம் முறையிடச் சென்றவர்களை, பொலிசார் திருப்பி அனுப்பியும் உள்ளார்கள் என்றால் பாருங்களே. யாழில் என்ன தாம் நடக்கிறதோ தெரியவில்லை என்று புலம்புகிறார்கள் தமிழர்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top