புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

 
நாமகிரிப்பேட்டை அருகே கோழி லோடு ஏற்றிய வேன் உருண்டதால் ஏற்பட்ட விபத்தில் பெண் பார்க்க சென்ற வாலிபர், அவரது தந்தை உட்பட 3 பேர் உடல் நசுங்கி
உயிரிழந்தனர்
.
நாமக்கல் மாவட்டம் புதன்சந்தையை அடுத்த நைனாமலை அடிவாரத்தை சேர்ந்தவர் பழனிசாமி(65). இவரது மகன் இளையராஜா(24). தறித்தொழிலாளர்கள். இளையராஜாவிற்கு திருமணம் செய்ய பழனிசாமி குடும்பத்தினர் பெண் பார்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை ஆத்தூரில் பெண் பார்ப்பதற்காக இளையராஜா, பழனிசாமி, இளையராஜாவின் சித்தப்பா கண்ணான் (எ) ஏழுமலையான் ஆகியோர் பைக்கில் புறப்பட்டனர்.

காலை 8 மணியளவில் ஆத்தூர் மெயின் ரோட்டில் நாமகிரிப்பேட்டை அடுத்த மூலப்பள்ளிப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த கோழி லோடு ஏற்றிய வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து இவர்கள் மீது மோதியது. இதில், மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். இவர்கள் மீது மோதிய வேன், சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இதில், கோழி லோடு ஏற்றப்பட்ட மினி வேனை ஓட்டி வந்த ராசிபுரம் கட்டனாச்சம்பட்டி தேவராஜ் மகன் விக்ரம்(21), உடன் வந்த ராசிபுரம் சக்திவேல்(21) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

விபத்து நடந்த பகுதியில் இருந்தவர்கள், அங்கு வந்து இடிபாடுகளில் சிக்கிய விக்ரம், சக்திவேலை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், விக்ரம் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தகவலறிந்த ராசிபுரம் டிஎஸ்பி ராஜன் உள்ளிட்ட போலீசார் விபத்து நடந்த பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

லைசென்ஸ் இல்லை: கோழி லோடு வேன் டிரைவர் விக்ரம் இரவு முழுவதும் சேலத்தில் கோழிகளை இறக்கி விட்டு மெட்டாலாவிற்கு வந்து கோழி இறக்கியுள்ளார். தூக்க கலக்கத்தில் வேன் வலது பக்கம் சென்றவுடன் பிரேக்கை உடனே அழுத்தியுள்ளார். இதில் வண்டி சாய்ந்து, இழுத்து சென்று விபத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் விக்ரமிற்கு டிரைவிங் லைசென்ஸ் இல்லை என்பது தெரியவந்தது.

பலியான இளையராஜாவின் செல்போன் மூலம் உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவரது பாக்கெட்டில் ரூ.11 ஆயிரம் பணம் இருந்தது. வண்டியில் சென்ற மூன்று பேரும் உட்கார்ந்த நிலையிலேயே தலை நசுங்கி இறந்துள்ளனர்
 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top