புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கோஸ்டாரிகா நாட்டின் காட்டு பகுதியில் ‘கண்ணாடி தவளை’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் உடலில் இருக்கும் எலும்புகள்கூட துல்லியமாக வெளியே தெரிகின்றன.


மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகாவின் மான்ட்வெர்ட் பகுதியில் உள்ள வெப்ப மண்டல காடுகளில் நிக் ராய்சன்ஸ் என்ற போட்டோகிராபர் சமீபத்தில் ஒரு ஆராய்ச்சிக்காக சென்றார். 20 நாட்கள் இருந்து பல்வேறு போட்டோக்களை பதிவு செய்தார்.

அப்போது வித்தியாசமான தவளையை அவர் கண்டுபிடித்தார். அதன் தோல் பகுதி பளபளவென்று கண்ணாடி போல தெள்ளத் தெளிவாக இருந்தது. உடலில் இருக்கும் எலும்புகள்கூட வெளியே தெரிந்தது. இதை பார்த்து நிக் ஆச்சரியம் அடைந்தார். கண்ணாடி தவளை குறித்து வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ‘‘கண்ணாடி தோல் வகை தவளைகள் அரிய இனமாக கருதப்படுகிறது.

முதன்முதலாக 1872,ல் கண்ணாடி தவளை கண்டறியப்பட்டது. அதிகபட்சமாக 2 இஞ்ச் நீளம்தான் இருக்கும். கொலம்பியா, ஈக்வடார் நாடுகளின் காட்டு பகுதிகளில் பெரிய சைஸ் கண்ணாடி தவளைகள்கூட இருக்கின்றன. காட்டுக்குள் சுற்றி திரியும் கண்ணாடி தவளைகள் முட்டை போடுவதற்காக ஆறு, கால்வாய் போன்ற நீர்நிலைகளுக்கு சென்றுவிட்டு மீண்டும் தரை பகுதிக்கு திரும்பிவிடுகின்றன.

ஒளி ஊடுருவும் விதமாக இவற்றின் தோல் பகுதி கண்ணாடி போல இருக்கின்றன. அதன் காரணமாக, உள்ளே இருக்கும் எலும்புகள்கூட வெளியே தெரிகின்றன’’ என்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top