புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கடலூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பிரசவத்துக்காக கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு நேற்று காலை 11.05 மணிக்கு ஆபரேஷன் மூலம் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை ஆண், பெண் என
இருபாலின குறிகளுடன் இருந்தது. இதுகுறித்து மாவட்ட சுகாதார துணை இணை இயக்குனர் டாக்டர் மனோகரன் கூறியதாவது: இது போன்ற வினோத தன்மையுடன் 20 ஆயிரத்தில் ஒரு குழந்தை பிறப்பது வழக்கம். கடலூர் ஜி.ஹெச்ல் ஆண்டுக்கு ஒரு குழந்தை இது போன்று பிறக்கிறது.

நெருங்கிய உறவில் திருமணம், கருவுற்ற நிலையில் கருக்கலைப்பு முயற்சிகள், கர்ப்ப காலத்தில் தீவிர காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுதல் போன்ற காரணங்களால் இதுபோன்ற குறைபாடுடன் கூடிய குழந்தை பிறக்கிறது. குழந்தை வளர்ந்த நிலையில் பெண் தன்மையுடன் செயல்பட விருப்பம் அதிகரிக்கும். அப்போது விருப்பத்தின் பேரில் அறுவை சிகிச்சை மூலம் ஆண்களுக்கான அடையாளங்கள் அகற்றப்பட்டு திருநங்கைகளாக வலம் வருவர். தற்போது குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. இருபாலின தன்மை கொண்ட குழந்தை பிறப்பு திருநங்கை பட்டியலிலேயே மருத்துவ பதிவேட்டில் பதிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
 
Top