புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோரில் பலர் குளிர்க்காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா தள வைத்தியசாலை வைத்திய அதிகாரி ஏ.எச்எம்.சமீம் தெரிவித்தார்.


கிண்ணியா பிரதேசத்தில் பூவரசந்தீவு, மற்றும் சமாவச்சத்தீவு போன்ற பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடமாடும் மருத்துவ சிகிச்சை முகாமுக்கு  சிகிச்சைபெறுவதற்கு வந்தவர்களிலேயே பலர் குளிர்க்காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நடமாடும் மருத்துவ சிகிச்சை முகாமில் கிண்ணியா மாவட்ட வைத்திய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். அந்த முகாமில் சிகிச்சை பெறுவதற்காக வந்தவர்களில் சுமார் 150 பேர் குளிர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, மழை வெள்ளம் , காட்டு வெள்ளம் பெருக் கெடுத்துள்ளதால் பூவரசந்தீவு, மற்றும் சமாவச்சத்தீவு போன்ற பிரதேசங்கள் நேற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டன. கிண்ணியாவில்  பாதிக்கப்பட்ட இடங்களுக்கு கிழக்கு முதலமைச்சர் நஜீப்-ஏ-மஜீத் கிண்ணியா பிரதேச செயலாளர் ஆகியோர் இன்று சனிக்கிழமை சென்று  பார்வையிட்டனர்.

பாதிதிக்கப்பட்ட மக்களுக்கு கிண்ணியா பிரதேச செயலகத்தினால் சமைத்த உணவுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top