புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சடங்கு என்ற பெயரில் பெண்களின் பிறப்பு உறுப்பை துண்டிப்பதற்கு தடை விதிக்கும்படி ஐ.நா. வலியுறுத்தி உள்ளது.மத்திய கிழக்கு, ஆசியா, குறிப்பாக ஏமன், ஈராக், இந்தோனேசியா மற்றும் 28
ஆப்ரிக்க நாடுகளில் பெண் குழந்தைகள் பிறந்த சில நாட்களிலோ அல்லது 15 வயதுக்கு உள்ளாகவோ அவர்களுடைய பிறப்பு உறுப்பை துண்டித்து விடுகின்றனர்.

இதனால் அவர்களுக்கு பாலியல் எண்ணம் குறையும் என்று நம்புகின்றனர். இதுபோன்ற ஆபரேஷன்கள் மருத்துவமனைகளில் நடப்பதில்லை. சட்டவிரோதமாக ஒரு குறிப்பிட்ட பிரிவினரே செய்கின்றனர். உலகளவில் 30 லட்சம் பெண் குழந்தைகளுக்கு இதுபோன்ற கொடுமை நடப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மதம், கலாசாரம், சமூகத்தின் பெயரில் இந்த பயங்கரம் நடத்தப்படுகிறது. பெண் குழந்தைகளுக்கு எதிரான இந்த கொடுமைக்கு தடை விதிக்கும்படி சம்பந்தப்பட்ட

நாடுகளை ஐ.நா. வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக ஐ.நா. சபையில் நேற்று தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பெண் குழந்தைகளின் பிறப்பு உறுப்பை சிதைக்கும் கொடுமையை தடுக்க சட்டம் கொண்டு வரவேண்டும் என்று 193 உறுப்பு நாடுகளை ஐ.நா. கேட்டுக் கொண்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top