புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பூண்டுலோயா பகுதியில் கடந்த 7 ஆம் திகதி சிற்றாறொன்றைக் கடக்க முற்பட்ட போது ஆற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாட்களுக்குப் பிறகு நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.


பூண்டுலோயா பிரதேசத்தில் கடந்த 7 ஆம் திகதி பிற்பகலில் கடும் மழை பெய்து கொண்டிருந்த போது குறிப்பிட்ட பெண் தனது கணவருடனும் பிள்ளையுடனும் வீட்டுக்கு அருகிலுள்ள சிற்றாறைக் கடந்துள்ளார். இதன்போது போது அந்தப் பெண்ணும் பிள்ளையும் ஆற்றில் தவறி விழுந்துள்ளனர்.

குறிப்பிட்ட பெண்ணின் கணவர் பிள்ளையை உடனடியாக தூக்கிய போதும் தனது மனைவியைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து தோட்ட மக்கள் குறிப்பிட்ட பெண்ணின் சடலத்தினை ஆற்றுப்பகுதிகளிலும் கொத்மலை நீர்த்தேக்கப்பகுதியிலும் தொடர்ச்சியாக தேடி வந்த போதும் சடலத்தினை மீட்க முடியாமல் போய்விட்டது.

இந்த நிலையில் நேற்று பிற்பகல் பூண்டுலோயா பழைய தபாலகத்துக்கு அருகிலுள்ள ஆற்றுக்குச் சென்ற இளைஞர் ஒருவர் ஆற்றோரத்தில் கையொன்று வெளிப்பட்டு தெரிவதைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து பூண்டுலோயா பொலிஸார் இந்தச்சடலம் குறித்த உறுதிப்படுத்தலுக்குப் பிறகு சடலத்தினை சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top