புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


டெல்லியில் ஓடும் பேருந்தில் 6 பேரால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட மாணவி போன்று 6 பேரால் சீரழிக்கப்பட்டு காட்டுமிராண்டித் தனமாக தாக்கப்பட்ட சிறுமி ராஜஸ்தான் மருத்தவமனையில் உயிருக்கு போராடிக்
கொண்டிருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிகார் நகரைச் சேர்ந்த 11 வயது சிறுமி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் திகதி பேருந்து நிலையத்தில் இருந்து 6 பேரால் கடத்தி பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டார்.

அந்த கயவர்கள் சிறுமியை சீரழித்ததோடு மட்டுமல்லாமல் அவரின் குடல், மர்ம உறுப்புகளை பெரிதும் சேதப்படுத்தி அவரை ஊர் எல்லையில் போட்டுவிட்டு சென்றனர்.

அவரது மர்ம உறுப்புகளில் பலத்த சேதம் அடைந்ததால் அவருக்கு அங்கு மட்டும் 6 மேஜர் ஆபரேஷன்களும், 8 மைனர் ஆபரேஷன்களும் செய்யப்பட்டன. கடந்த ஆகஸ்ட் 22ம் திகதி அவரை ஜெய்பூரில் உள்ள ஜேகே லான் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரது நிலையைப் பார்த்து மருத்துவர்களே பேரதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து டாக்டர் எல்.டி. அகர்வால் கூறுகையில்,

நாங்களும் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக எங்களால் முடிந்ததை செய்து வருகிறோம். அவரது நிலைமையைப் பார்த்து நாங்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தோம்.

அந்த சிறுமிக்கு 6 அக்கா மற்றும் 1 அண்ணன் உள்ளனர். பீகார் மாநிலம் தர்பங்காவைச் சேர்ந்த அவரின் தந்தை இறந்தபிறகு தாயுடன் ராஜஸ்தானில் வந்து குடியேறினார்கள்.

இந்த சம்பவம் குறித்து முதலில் பொலிசார் வழக்குப் பதிவு செய்ய மறுத்துவிட்டனர் என்று சிறுமியின் குடும்பத்தார் தெரிவித்தனர். அதன் பிறகு உள்ளூர் மக்கள் கண்டனப் பேரணி நடத்திய பிறகு தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்டை தொடர்பு கொண்ட பிறகே குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டாலும் அதில் 2 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளுக்கு அரசியல்வாதிகளுடன் தொடர்பு இருப்பதால் பொலிசார் அவர்கள் மீது இறக்கம் காட்டுவதாக சிறுமியின் குடும்பத்தார் தெரிவித்தனர்.

மேலும் உண்மையான குற்றவாளிகள் சுதந்திரமாகத் திரிவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top