புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சாந்தை சித்தி விநாயகர் சனசமுக நிலையத்தில் (01/01/2013) இன்று மாலை 17.00 மணியளவில் பொதுக்கூட்டமும் எம்மூர் சிறுவர்களின் நடனமும் இடம்பெற்றது அதனைதொடர்ந்து  நிலையத்தில் கல்வி கற்று  வரும் மாணவர்களுக்கு  பரிசில்கள்  வழங்கி
அவர்களது கல்விவளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கபட்டது. அத்துடன்  வறுமைப்பட்ட
மாணவர்களுக்கு அவர்களின் வருங்கால கல்வி வளர்ச்சிக்காக ஒரு மாணவருக்கு தலா 5000 ரூபாய் வீதம் மக்களை வங்கியில் இசுனு உதான சேமிப்பு கணக்கில் வைப்பில் இட்டு அவ் மாணவர்களிடம் வைப்பு புத்தகம் கையளிக்கப்பட்டுள்ளது.


சாந்தை சித்தி விநாயகர் சனசமுக நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு எமது கிராமத்தை சேர்ந்த புலம் பெயர்ந்து வாழும் அன்பர்களினால் மாணவர்களின் வருங்கால கல்வி வளர்ச்சியினை மேம்படுத்துவதற்காக சாந்தை சித்தி விநாயகர் சனசமுக நிலையத்தின் ஊடக நிதி உதவி வழங்கிய அன்பர்களின் பெயர் விபரம்.

நோர்வே பண் தமிழ் பண்பாட்டு கழகத்தினர்                                                 20000. 00

கஜேந்திரன் பாலதேவராஜ் (கனடா)                                                               16000. 00

பக்தி இசை வேந்தன் T .S ஜெயராஜா குடும்பத்தினர் (நோர்வே)                 10000. 00

கனகசபை விக்கினேஸ்வரன் (ஜெர்மனி)                                                      8000.00

சிவராசா கமலாதேவி குடும்பத்தினர் (சுவிடன்)                                            2000. 00      

நோர்வே பண் தமிழ் பண்பாட்டு கழகத்தினரால் பாடசாலை சிருடைக்காக வழங்கப்பட்ட நிதியினை வேறு கல்வி செயர்த்திட்டத்திர்க்காக மாறி அமைத்த விபரம்.

பாடசாலை சிருடை பாடசாலையிலேயே இலவசமாக வழங்கப்படுவதனால் தங்கள் கழகத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட இவ் நிதியினை சாந்தை சித்தி விநாயகர் சனசமுக நிலையத்தில் கல்வி பயிலும் வறுமைப்பட்ட மாணவர்களுக்கு அவர்களின் வருங்கால கல்வி வளர்ச்சிக்காக ஒரு மாணவருக்கு தலா 5000 ரூபாய் வீதம் மக்களை வங்கியில் இசுனு உதான சேமிப்பு கணக்கில் வைப்பில் இட்டு அவ் மாணவர்களிடம் வைப்பு புத்தகம் கையளிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற மாணவச்செல்வங்களின் கல்வி வளர்ச்சியினை மேம்படுத்த உங்களிடம் இருந்து உதவிக்கரங்களை எதிர்பாக்கும் மாணவர்களும் சாந்தை சித்தி விநாயகர் சனசமுகநிலைய அங்கத்தவர்களும்.

பாரெல்லாம் பரந்து வாழும் எம் ஊர் உறவுகளுக்கு சாந்தை சித்தி விநாயகர் சனசமுக நிலைய நிர்வாகத்தினர் புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றனர்.







































































தகவல்_சாந்தை.கொம்
 
Top