புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கல்லூரி மாணவியை காதலித்து திருமணம் செய்ததால் வேலையிலிருந்து நீக்கப்பட்ட 60 வயது பேராசிரியர், காதல் பள்ளிக்கூடம் தொடங்கும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

பாட்னா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள பி.என்.கல்லூரியில் இந்தி பேராசிரியராக பணியாற்றிய மதுக்நாத்(வயது 53) தன் வகுப்பில் படித்த 23 வயது ஜூலி என்ற மாணவியை காதலித்து வந்தார்.

இந்த தகவல் 2006ம் ஆண்டு வெளியே தெரிய வர, "மகள் வயதில் இருக்கும் மாணவியுடன் காதலா?" என கொதித்த மாணவர்களும் சக பேராசிரியர்களும் மதுக் நாத்தை அடித்து துவைத்தனர். இந்த விவகாரம் அப்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. எனினும் மாணவி ஜூலி மீதான காதலை மட்டும் பேராசிரியர் மதுக் நாத் கைவிடவில்லை.

இதனால் 2009ம் ஆண்டுகல்லூரியில் இருந்து அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். ஏற்கனவே திருமணமான மதுக் நாத், பின்னர் ஜூலியை திருமணம் செய்து கொண்டார். இப்போது 60 வயதாகும் மதுக், தன் காதல் மனைவியுடன் பாட்னாவில் இன்பமாக வாழ்க்கை நடத்தி வருகிறார்.

காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் ஏராளமான காதலர்களும் பத்திரிகையாளர்களும் மதுக் நாத்தை சந்தித்தனர்.

அப்போது அவர் கூறியதாவது: நான் ஏற்கனவே திருமணம் ஆனவன் தான். மகள் வயதில் மாணவியை காதலித்தது தவறு தான். காதலுக்கு கண் இல்லையே... காதலித்து விட்டேன்; ஜூலியை மணந்தும் கொண்டேன்.

நான் செய்தது தவறு என தெரிவித்து, கல்லூரியிலிருந்து என்னை பணிநீக்கம் செய்தனர். கணக்கை முடித்து, பி.எப்., மற்றும் பிற பலன்களுக்கான தொகை, சில நாட்களுக்கு முன் தான் வந்தது.

காதலர் தினத்தன்று என் உயிர் காதலி ஜூலிக்கு கார் பரிசு வழங்க வேண்டும் என நினைத்தேன். குறிப்பிட்ட ஒரு மாடல் காரையே பரிசாக வழங்க நினைத்திருந்தேன். அதே காரையே ஜூலியும் விரும்பியிருந்தது எனக்கு பின்னர் தான் தெரிய வந்தது. நானும் ஜூலியும் மகிழ்ச்சியாக வாழ்கிறோம்.

கடந்த சில ஆண்டுகளாகவே 15 லட்ச ரூபாய் செலவழித்து என் சொந்த ஊரான பாகல்பூரில் காதல் பள்ளிக் கூடம் கட்டி வருகிறேன், விரைவில் அதை தொடங்க உள்ளேன்.

அந்த பள்ளியில் காதலின் மகத்துவம் குறித்து அனைத்து வயதினருக்கும் கற்று கொடுக்க உள்ளேன் என பேராசிரியர் மதுக் நாத் கூறினார்.

அப்போது அருகில் இருந்த காதல் மனைவியான மாணவி ஜூலி, கணவரான பேராசிரியரை கண்கொட்டாமல் பார்த்து ரசித்து கொண்டிருந்தார்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top