புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பதுளை அமுனுவெல்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள கஜூவத்தை என்ற கிராமத்தில் பேய் உலவும் கதை தொடர்பில் பேசப்படுகிறது.


இதற்கு காரணம் இந்த கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு நண்பகல் வேளைகளில் கல்விழும் சம்பவம் தொடர்பிலேயே இந்த பேய் பயம் ஏற்பட்டுள்ளது.கஜூவத்தை கிராமத்தில் உள்ள நபர் ஒருவர் ஒரு மாதத்திற்கு முன்னர் பலாமரம் ஒன்றில் தூக்கிட்டு மரணமானார்.


இதனை தொடர்ந்து குறித்த நபரின் ஏழாம் நாள் தானம் வழங்கும் நிகழ்வை தொடர்ந்தே இந்த கல்விழும் சம்பவம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் காரணமாக இந்த சம்பவம் பேய் வேலை என்று கிராம மக்கள் நம்புகின்றனர்.பல வீடுகளுக்கு கல் விழுவதாக ஒரு மாதத்திற்கு முன்னர் தெரிவிக்கப்பட்டது.எனினும் இந்த நிலையை தற்சமயம் மாறியுள்ளது.

தற்போது ஒரு வீட்டுக்கு மாத்திரமே கல்விழும் சம்பவம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.தானம் வழங்கிய வீட்டிற்கே முதலில் கல்விழும் சம்பவம் இடம்பெற்றதாக அறியவந்ததுடன் இதன் காரணமாக குறித்த மரணமானவரின் மனைவி அந்த வீட்டை விட்டு வெளியேறினார்.

எனினும் தற்கொலை செய்து கொண்டவரின் மனைவி இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் மரணமானவருக்கு எதிரிகள் இந்த கிராமத்தில் இருப்பதாகவும் அவர்கள் ஒருநாள் தமது வீட்டுக்கு கல் எறிந்ததாகவும் குறிப்பிட்டார்.இந்த சம்வத்தின் பின்னிலையில் ஒரு குடும்பம் இருப்பதாக அவர் சந்தேகிக்கிறார்.

இந்த நிலையில். இந்த கல்விழும் சம்வம் தொடர்பில் இதுவரையிலும் யாருக்கும் காயங்கள் ஏற்படாத போதிலும் வீமுடுகளின் கூரைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள பதுளை காவல் துறையினர் விசேட குழுவென்றை அமைத்துள்ளதுடன் அவர்கள் கல்விழுவதாக கூறப்படும் வீட்டை சோதனை செய்துள்ளனர்.

தற்போது குறித்த அந்த ஒரு வீடு குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள அங்கு சென்று விசாரணை மேற்கொண்டிருந்த சமயமும் குறித்த வீட்டின் கூரையின் மீது கல் விழுந்துள்ளது.

இந்த கல்வீச்சு சமபவத்தை குறித்த ஒரு குழுவினரே மேற்கொள்கின்றனர் என்பது குறித்து காவல்துறையினருக்கு இதுவரையிலும் அறிந்துகொள்ள முடியாதுள்ளது.

இது தொடர்பில் விசேட காவல்துறை குழுவொன்று அமைக்கப்பட்டு விசேட விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top