புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சில படங்களில் எங்குபார்த்தாலும் ஆளாக தெரிகிறது என்பார்கள். ஆனால் பாரதிராஜா இயக்கத்தில் கார்த்திகா நாயகியாக நடித்துள்ள அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் எந்த காட்சியில் பார்த்தாலும் ஒரே
ஆட்டுமந்தையாகத்தான் தெரிகிறதாம். ஒரே வார்த்தையில் சொல்லப்போனால் ஆடு இல்லாத காட்சியே இல்லை என்கிறார்கள். இதுபற்றி அப்படத்தின் நாயகி கார்த்திகாவைக்கேட்டால், உண்மைதான். அந்த படத்தில் நான் ஆடுமேய்க்கும் பெண்ணாகத்தான் நடித்திருக்கிறேன். அதனால் இப்படத்தில் நான் நடிக்க ஒப்பந்தமானபோது, ஆட்டுடன் பழகியிருக்கிறாயா? என்றுதான் கேட்டார்கள். நானோ, ஆட்டுக்குட்டியை இதுவரை தொட்டுக்கூட பார்த்ததில்லை என்று சொன்னேன்.

அதையடுத்து, என்னை தேனிக்கு கூட்டிச்சென்று, சில ஆடுமேய்ச்சிகளிடம் சொல்லி, ஆடுகளை எப்படி மந்தையாக அழைத்து செல்வது என்பதை சொல்லிக்கொடுத்தார்கள். அப்போது எந்த மாதிரி ஆடுகளுக்கு புரியுற மாதிரி குரல் கொடுக்க வேண்டும் என்றும் சீட்டி அடித்து காட்டினார்கள். இப்படியாக நடிப்பு பயிற்சியை விட, ஆடு மேய்ப்பதற்காகத்தான் நிறைய பயிற்சி எடுத்தேன் என்று சொல்லும் கார்த்திகா, படத்தில் எனக்கு முதுகெலும்பு போன்ற கதாபாத்திரம் என்பதால், நிறைய சீன்களில் நான்தான் வருவேன. நான் வந்தால் ஆடுகளும் வந்தாக வேண்டும். அதைப்பார்த்துதான் எங்கு பார்த்தாலும் ஒரே ஆட்டுமந்தை கூட்டமாக தெரிவதாக சொல்கிறார்கள் என்று தெளிவுபடுத்துகிறார் கார்த்திகா.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top