புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சர்வாதிகாரி ஹிட்லர், சைவ உணவு பழக்கம் கொண்டவர்' என, அவரிடம், "உணவு பரிசோதகராக' பணி புரிந்த பெண் தெரிவித்திருக்கிறார்.இரண்டாம் உலகப்போருக்கு காரணமானவரான ஜெர்மன்
அதிபர் ஹிட்லர், ஒரு கொடுங்கோலராக, பரவலாக அறியப்பட்டவர். கோடிக்கணக்கான யூதர்களை கொன்று குவித்த அவர், "சைவ உணவுகளையே விரும்பி சாப்பிட்டார்' என, அவரது உணவை பரிசோதித்த குழுவில் பணிபுரிந்த, மாகோட் வோயெல்க், 95, என்ற பெண் தெரிவித்துள்ளார்.

 
ஹிட்லரின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், அவர் உணவில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய, அந்த உணவை முதலில் சுவை பார்க்க, தனியாக ஆட்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இரண்டாம் உலகப்போர் சமயத்தில், ஹிட்லர் பயன்படுத்திய, "உல்ப்ஸ் லேர்' என்ற ராணுவ தலைமையகம் ஒன்றில், "உணவு பரிசோதகர்' குழு ஒன்று இருந்தது. அக்குழுவில், மாகோட் வோயெல்க் பணியாற்றினார். அவர் கணவரும், ஹிட்லர் படையில் பணியாற்றியவர். இது குறித்து மாகோட் வோயெல்க் கூறியதாவது:

ஹிட்லருக்காக, தினமும், 11 முதல், 12 மணிக்கு தயாராகும் உணவுகள், எங்கள் குழுவால் சுவை பார்க்கப்பட்டு, உணவில் விஷம் கலக்கப்படவில்லை என தெரியவந்த பின், அவருக்கு பரிமாறப்படும். தண்டுவகை உணவுகள், பட்டாணி போன்றவற்றை அரிசி மற்றும் பச்சை காய்கறிகளுடன் சாப்பிடுவதை, ஹிட்லர் பெரிதும் விரும்பினார். அசைவ உணவுகள் எதையும், ஹிட்லர் சாப்பிட்டதாக எனக்கு நினைவில்லை.இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்றால், ஜெர்மனியை சைவ நாடாக மாற்றப் போவதாக, எங்களிடம், ஹிட்லர் தெரிவித்தார். இவ்வாறு மாகோட் கூறினார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top