புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நடுவிரலை நீட்டிய புகைப்படம் டுவிட்டர் இணையத்தளத்தில் வெளியானதால் விமான பணி பெண்ணொருவர் பணிநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது.


ரஷ்யா போன்ற நாடுகளில் கைவிரல்கள் உயர்த்தி காண்பிக்கப்படுவது ஆபாச குறியீடுகளாக கணக்கிலெடுக்கப்படுகின்றன. இவ்வாறு பலர் மெய்மறந்து விரல்களை உயர்த்திவிடுவதால் விபரீதமான விளைவுகளை எதிர்கொண்டுள்ளனர். அவர்களது பட்டியலில் தற்போது ரஷ்யாவை சேர்ந்த விமான பணி பெண்ணொருவரும் இணைத்துகொள்ளப்பட்டுள்ளார்.

இவர், பயணிகள் விமானத்தில்; நடுவிரலை நீட்டியவாறு புகைப்படமொன்றை எடுத்துள்ளதுடன் அதனை தனது டுவிட்டர் இணையத்தளத்திலும் வெளியிட்டுள்ளார்.

டெடெய்னா கொசெலெங்கோ என்ற விமான பணிபெண்ணே இவ்வாறு தனது புகைப்படத்தை பேஸ்புக் இணையத்தளத்தை போன்று ரஷ்யாவில் மிகவும் புகழ்பெற்ற சமூகதளம் ஒன்றில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இப்புகைப்படம் வெளியாகி ஒரு சில மணிநேரத்தில் பெருந்தொகையான பார்வையாளர்கள் பார்த்துள்ளதுடன் குறித்த விமானத்தின் உரிமையாளரும் இப்புகைப்படத்தை பார்வையிட்டுள்ளார்;.

அதனைத் தொடர்ந்து விமான பணி பெண்ணை விமான நிலையத்தின் உரிமையாளர் பணி நீக்கம்  செய்துள்ளார்.

'பயணிகள் குறித்த டெடெய்னாவின் அணுகுமுறையையும் அவளது நடத்தை கோலத்தையும் இப்புகைப்படம் காணப்பிக்கின்றது. டெடெய்னா தனது முகாமையாளருடன் பேசும்போது அவர் தனது குற்றத்தை ஒப்புகொண்டார்' என விமான நிலையத்தின்  உரிமையாளர் டெடெய்னாவின் புகைப்படம் குறித்து அறிவித்துள்ளார்.

ஆனால், டெடெய்னா தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

'நான் குற்றவாளி அல்ல. அந்த புகைப்படம் எனது பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது. நான் எனது புகைப்படமொன்றை மட்டுமே அதில் சேர்த்தேன். இந்த விமானமானது எனது நிறுவனத்தினுடையதல்ல.  அவர்கள் எனது வாழ்க்கையை ஏன் வீனாக்கினார்கள் என்று தெரியவில்லை. நான் உங்களிடம் உதவியையும் ஆதரவையும் தறுமாறு வேண்டி  நிற்கிறேன்' என அப் பெண் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top