புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


விஷயங்களை புரிந்துகொள்வதிலும், கற்றுக்கொள்வதிலும் சிலர் மிக மெதுவாக இருப்பதற்கு, அவர்களின் மூளைகளில் தகவல்களை பிரித்தறியும் செயல் போதுமான
அளவு நடைபெறாததே காரணம் என, ஜெர்மனியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மற்றவர்கள் உடனடியாக புரிந்துகொள்ளும் விஷயங்கள், சிலருக்கு புரியாமல் போவது ஏன் என்பதை அறிய, ஜெர்மனியின், ஹம்போல்டு பல்கலைக்கழகம் மற்றும் மேக்ஸ் பிளாங்க் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். மூளையில், கற்றலுக்கு துணை செய்யும் பிரித்தறியும் செயல் பகுதி (சொமொட்டோ சென்சரி கார்டெக்ஸ்) செயல்படும் விதத்தை பொறுத்தே, மனிதர்களின் புரிந்துகொள்ளும் ஆற்றல் உள்ளது. இதற்கு மூளையில் உள்ள ஆல்பா அலைகளில் ஏற்படும் மாறுதல்கள் துணை செய்கின்றன.

இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களின் தொடு உணர்வை அதிகரிக்க, அவர்களின் கைகளில், 30 நிமிடங்கள் மின்சார தூண்டுதல் தரப்பட்டது. இதன் மூலம் மூளையின் ஆல்பா அலைகள் அதிகரிக்கப்பட்டன.மூளையில் ஆல்பா அலைகள் அதிகரித்த சமயத்தில், ஆய்வில் கலந்து கொண்டவர்களின் புரிந்துகொள்ளும் திறன் அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top