புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நோய் தடுப்பு மருந்துகள், குணப்படுத்தாத காயங்களை கூட, சாதாரண சீனி குணப்படுத்தும் அதிசய மருத்துவம், பிரிட்டனில் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டுள்ளது. புண்களை குணப்படுத்த, “ஆன்டிபயாடிக்ஸ்’ மருந்துகள்
பயன்படுத்தப்படுகின்றன. புண், ரணம், சீழ் பிடித்தல், சளி போன்றவற்றை குணப்படுத்த, “ஆன்டிபயாடிக்ஸ்’ மருந்துகளால் தான் முடியும்’ என்ற மருத்துவ கொள்கையை, ஜிம்பாவே நாட்டை சேர்ந்த டாக்டர், தகர்த்துள்ளார்.பிரிட்டனின், “வோல்பர்ஹாம்ப்டன்’ மருத்துவ பல்கலைக்கழகத்தில், மூத்த பேராசிரியராக பணியாற்றுபவர், மோசஸ் முருண்டு.

ஜிம்பாவே நாட்டை பூர்வீகமாக கொண்ட இவரின் தந்தை, நாட்டு மருத்துவர். முழங்காலுக்கு மேலே கால் வெட்டி எடுக்கப்பட்ட, பேலிஸ் என்ற, 62 வயது, பிரிட்டன் இன்ஜினியரின், கால் காயம் ஆறாமல், அவருக்கு மிகுந்த சிரமத்தை கொடுத்து வந்தது. எவ்வளவோ, மேன்மையான, ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகளை கொடுத்த பிறகும், அவரின் கால் காயம் ஆறவில்லை.மோசஸ் முருண்டுவிடம், சிகிச்சைக்காக பேலிஸ் வந்தார். அவரின் மருத்துவ வரலாற்றை கேட்டறிந்த முருண்டு, ஜிம்பாவே மருத்துவம் தான் அவருக்கு சரிப்பட்டு வரும் என கருதி, யாருமே இதுவரை செய்திராத அதிரடி சிகிச்சை அளித்தார்.

பேலிசின் வெட்டுபட்ட காலை, நன்றாக சுத்தம் செய்து, அதில், காபி, டீயில் பயன்படுத்தப்படும் சீனியை கொட்டி, கட்டு போட்டு அனுப்பி விட்டார். நான்கு நாட்கள் கழித்து, கட்டை அவிழ்த்து பார்த்த போது, காயம் ஆறியிருந்தது.இப்படியே, ஒரு மாதத்திற்குள், முழு காயத்தையும், சீனியால், முருண்டு சரிபடுத்தி விட்டார். இதை, “மருத்துவ அதிசயம்’ என, போற்றிய சக டாக்டர்கள், முருண்டுவின் மருத்துவத்தை எண்ணி வியந்தனர்.

இதுபற்றி, சீனி சிகிச்சைக்கு ஆளான, இன்ஜினியர், பேலிஸ் கூறியதாவது:முதலில் எனக்கும், சந்தேகமாகத்தான் இருந்தது. ரணமாக இருந்த காயத்தின் மீது, முதலில், ஒரு கப் சீனியை கொட்டி, டாக்டர் முருண்டு கட்டு போட்டார். காயத்திலிருந்த நீர், அனைத்தையும் சீனி ஈர்த்துவிட்டது.இதனால் காயம் லேசாக ஆறியது. அடுத்த சில நாட்களில், படிப்படியாக சீனி அளவை குறைத்து, இப்போது காயமே இல்லாத அளவிற்கு செய்து விட்டார்.இவ்வாறு அவர், மகிழ்ச்சியாக கூறினார். சீனி, காயத்தை ஆற்றாது என நம்பப்படும் இந்த நாட்களில், ஆறாத காயத்தை, சீனி மூலம் ஆற்றியுள்ள, மோசஸ் முருண்டுவுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top