புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியாவின், லக்னி கிராமத்தில் வசிக்கும் ஏழை பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள வீடுகளில் எடுபிடி
வேலை செய்து வருகிறார். கடந்த 14ம் திகதி, தனது 3 மகள்களையும் காணவில்லை என்று அப்பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

முறையே 11, 9, 5 வயதான தனது மகள்களை கண்டுபிடித்து தருமாறும் அவர் பொலிசாரை கேட்டுக்கொண்டார்.

மறுநாள் காலை, லக்னி கிராமத்தின் அருகே உள்ள சாலையோர தாபாவில் இருந்து சற்று தூரத்தில் உள்ள ஒதுக்குப்புறமான இடத்தில் 3 சிறுமிகள் பிணமாக கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

முந்தைய நாள் இரவு புகார் அளித்த பெண்ணை உடன் அழைத்துச் சென்ற பொலிசார், பிணமாக கிடப்பது அவரது மகள்கள் தானா? என்பதை உறுதிபடுத்தும்படி அவரிடம் கேட்டதற்கு, கதறிப் புலம்பிய அந்த தாய், ´ஆம்.. இவர்கள் 3 பேரும் என் மகள்கள் தான்´ என்று அடையாளம் காட்டினார்.

ஏற்கனவே, ஒருவேளை சோற்றுக்கு கூட வழியில்லாத வறுமை நிலையில் இருந்த அந்த பெண்ணின் குடும்ப சூழ்நிலையை சாதகமாக்கிக் கொள்ள நினைத்த பொலிசார், பசிக்கும் வறுமைக்கும் தாக்குப் பிடிக்க முடியாமல் அந்த 3 சிறுமிகளும் தற்கொலை செய்துக்கொண்டதாக இந்த வழக்கை திசை திருப்ப முயன்றனர்.

ஆனால், அந்த சிறுமிகளின் பிணம் இருந்த இடத்தில் மது பாட்டில்களும், ஆண்களின் காலணிகளும் சிதறிக்கிடந்ததால், அவர்கள் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் லக்னி கிராமத்தவர்களிடையே ஏற்பட்டது.

இதனையடுத்து, சிறுமிகளின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரேத பரிசோதனையில், சுமார் 11, 9 மற்றும் ஐந்தே வயதான அந்த 3 சிறுமிகளும் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு, பின் கொல்லப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.

தற்போது, நாக்பூர் சரக பொலிஸ் ஐ.ஜி. தலைமையில் மகாராஷ்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top