புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தோனேஷியாவின் டொமோஹோன் நகரிலுள்ள லோக்கோன் எரிமலை குமுறத் தொடங்கியுள்ளது.

இதனால்,எரிமலையை சுற்றியுள்ள மக்கள் வெளியேறும்படி அந்நாட்டின் தேசிய மற்றும் உள்ளூர் பேரிடர் மேலாண்மை எச்சரித்துள்ளது.

பயங்கர சத்தத்துடன் வெடித்த எரிமலை சுமார் 2 ஆயிரம் மீற்றர் உயரத்திற்கு தீ பிழம்பை வெளியேற்றியது.

எரிமலையின் நிலையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அருகிலுள்ள கிராமங்களின் பாதுகாப்பு பற்றி ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிமலை சீற்றத்தால் சுற்றியுள்ள மூன்று கிராமங்களில் அதன் சாம்பல் படிந்துள்ளது.

கடந்த 1689 மீற்றர் உயரமுள்ள இந்த எரிமலை கடந்த 2011ம் ஆண்டு யூலை முதல் சாம்பலை வெளியிட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top