புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரஜோரி மாவட்ட வனப்பகுதியில் தனியாக சென்ற இளம்பெண்ணை கடந்த வாரம் ஒரு நபர் கற்பழித்தான். இதுதொடர்பாக அந்த பெண் அளித்த புகாரின்
அடிப்படையில் போலீசார் அவனை கைது செய்தனர்.

தனக்கு உடல் நலம் சரியில்லை என கூறியதையடுத்து அவனை ஆஸ்பத்திரியில் அனுமதித்த போலீசார் அவனுக்கு காவல் காத்து வந்தனர். இந்நிலையில், அம்மாநிலத்தில் நிகழ்ந்த பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை போலீசார் வி.வி.ஐ.பி.க்கள் பயணிக்கும் ஹெலிகாப்டரில் ஏற்றிக்கொண்டு வந்து அந்த கைதி சிகிச்சை பெற்று வந்த ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

காயமடைந்த அனைவருக்கும் அரசின் சார்பில் ரூ.5 ஆயிரம் ரொக்கப் பணம் வழங்கப்பட்டது. இந்த பணத்தை பெற காயமடைந்தவர்களின் உறவினர்கள் வரிசையில் நின்றிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை சாதகமாக்கிக் கொண்ட கற்பழிப்பு குற்றவாளி, போலீசாரின் பார்வையில் இருந்து நழுவி நிவாரணத் தொகை வாங்க காத்திருந்தவர்களின் வரிசையில் இணைந்துக்கொண்டான்.

ரூ.5 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு, புறப்பட தயாராக இருந்த வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டரில் ஏறி போலீசாருக்கு 'டாட்டா' காட்டியபடி அந்த குற்றவாளி பறந்து சென்றான்.

அவன் தப்பிச் சென்ற ஹெலிகாப்டர், காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, கவர்னர் மற்றும் மாநில மந்திரிகள் பயணிப்பதற்காக வாங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top