புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இங்கிலாந்தில் 16 வயது சிறுமி ஒருவரை, ஒரே நாளில் 90 பேர் அடுத்தடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


சமூக நீதிக்கான மையம் என்ற தனியார் அமைப்பே இந்த குற்றச்சாட்டை முன்வைத்து அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.


இங்கிலாந்தில் பெண்கள் குறிப்பாக சிறார்களுக்கு எதிரான வன்முறை, பாலியல் பலாத்காரக் கொடுமைகள் பெருமளவில் அதிகரித்து வருவதாகவும் குறித்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.


இங்கிலாந்தில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களுக்கு உதாரணமாக, இந்த16 வயது சிறுமிக்கு நேர்ந்த கதியை அந்த அமைப்பு எடுத்துக் கூறியுள்ளது.


சம்பந்தப்பட்ட சிறுமியை கடத்திச் சென்று அடைத்து வைத்து வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். ஒரே நாளில் அந்த சிறுமியை 90 பேர் கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளனர்.


தற்போது அந்த சிறுமி அபாய கட்டத்தில் இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் சிறுமி எங்கே இருக்கிறார் என்பது குறித்து அதிகாரிகள் தெரிவிக்க மறுத்து விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்பட்டனரா என்பது குறித்தும் தகவல் தெரிவிக்கப்படவில்லை.

 தனக்கு நேர்ந்த கொடுமையின் தாக்கத்திலிருந்து அந்த சிறுமி இன்னும் மீளவில்லையாம். தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த நிலையிலேயே இருக்கிறாராம்.


இந்த அமைப்பு மேலும் கூறுகையில், இங்கிலாந்தில் சிறுமிகளைக் கடத்தி பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்துவது அதிகரித்து வருகிறது. 2011-12ம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட சிறுமிகளும், பெண்களும் கடத்தப்பட்டு பாலியல் குற்றத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது.


சிறுமிகள்தான் பெருமளவில் இந்த பாலியல் குற்றவாளிகளால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் இந்த அமைப்பு கூறுகிறது. அரசுத்தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்றும் சட்டத்தை உறுதியாக பின்பற்றுவதில்லை என்றும் இந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top