புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சர்க்கரைக்கு மாற்றாக கருதப்படும் ஆஸ்பர்டைம் என்ற செயற்கை இனிப்பு, 1974 ஆம் ஆண்டிலிருந்தே பயன்பாட்டில்  இருந்து வருகிறது. இது பாதுகாப்பானது என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகக் குழுவும்
அங்கீகரித்துள்ளது.  டயட் கோக் போன்ற பிரபலமான குளிர்பானங்களில் இது சேர்க்கப்படுகிறது. ஒரு மில்லியன்  மக்களுக்கும் மேலானோர் இத்தகைய குளிர்பானங்களைத் தினமும் பருகுகின்றனர்.

குறைப்பிரசவம், கேன்சர் போன்ற நோய்களுக்கு இவ்வகை செயற்கை இனிப்புகள் காரணமாகலாம் என்ற அதிர்ச்சித் தகவலை இங்கிலாந்து நாட்டின் நிபுணர் ஒருவர் வெளியிட்டுள்ளார். இந்த வகை இனிப்புகளின்  செயல்பாடுகளை மீண்டும் ஆய்வு செய்யுமாறு அவர் பரிந்துரை செய்துள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள சசெக்ஸ் யுனிவர்சிட்டியில் விஞ்ஞானப் பேராசிரியராக பணியாற்றுபவரும், உணவுக் கொள்கையில் நிபுணருமான எரிக் மில்ஸ்டன் இங்கிலாந்தில் உள்ள உணவுத்தர மையத்தை உருவாக்கியதில் முக்கிய  பங்காற்றியவர். அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகக்குழுவின் அங்கீகாரம் தவறானது என்று இவர்  கருதுகிறார். பாதகமான விளைவுகள் எதையும் காட்டாத, வியாபார நோக்கினை உடைய நிதி உதவிகள் கொண்ட  ஆராய்ச்சி முடிவுகள் சரியானவை என்ற நோக்கத்தில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top