புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பிரிட்டனிலுள்ள டர்ஹாமில் வாழ்ந்து வந்த ஸ்டீபன் செடோன்(Stephen Seddon) 2,30,000 பவுண்டு மதிப்புடைய சொத்தை பெறுவதற்காக தனது பெற்றோரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.


இக்கொலை வழக்கு மேன்சஸ்ட்டர்(Manchester) நீதிமன்றத்தில் தற்பொழுது விசாரணைக்கு வந்துள்ளது.

ராபர்ட் செடோன்(Robert Seddon), பேட்ரிஷியா செடோன்(Patricia Seddon) தம்பதியரின் ஒரே மகனான ஸ்டீபன் ஒரு நிறுவனத்தின் இயக்குநர் ஆவார்.

ஸ்டீபனுக்கு அவரது பெற்றோர் 40,000 பவுண்டும், சீஹாம் என்ற ஊரில் ஒரு சொந்த வீடும் வாங்கிக் கொடுத்துள்ளனர்.

ஆனால் இவர் ஆடம்பரச் செலவுகளைச் செய்து கொண்டு பல்வேறு மோசடி வேலைகளில் ஈடுபட்டதால் வெவ்வேறு சிக்கல்களுக்குள் மாட்டிகொண்டார். இதனால் அவருக்கு ஏராளமாகப் பணம் தேவைப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2009ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தங்களில் யார் முதலில் இறந்தாலும் அடுத்தவருக்கு 2,30,000 பவுண்டு மதிப்பிலான சொத்து சேரும் என்று இவரது தந்தை உயில் எழுதி வைத்திருந்தார்.

ஒரு வேளை இருவருமே இறந்து விட்டால் சொத்து முழுவதும் மகன் ஸ்டீபனுக்கு உரிமையாகும் என்றும் உயிலில் குறிப்பட்டுயிருந்தது. இந்த உயிலின் விவரத்தை அறிந்த ஸ்டீபன் பெற்றோரைக் கொல்ல முடிவு செய்தார். இது இயற்கை மரணமாகத் தெரிய வேண்டும் என்று ஒரு திட்டம் வகுத்தார்.

ஒரு காரை வாடகைக்கு எடுத்து பெற்றோரை அதில் ஏற்றிக்கொண்டு தனது வீட்டிலிருந்து மேனசஸ்டர் நகரை நோக்கி பயணித்தார். அப்போது பிரிட்ஜ் வாட்டர்(Bridgewater) கால்வாய் வந்ததும் சாலையிலிருந்து காரை தண்ணீருக்குள் செலுத்தினார்.

காரின் பின் இருக்கையில் சீட் பெல்ட் மாட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கும் பெற்றோர் நீரில் மூழ்கி இறப்பது உறுதியாகி விடும் என்று நம்பினார். ஆனால் இவரது நம்பிக்கை பொய்த்து விட்டது.

+ இவரே பெற்றோரை காரை விட்டு வெளியே கொண்டு வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அச்சம்பவத்தை பார்த்த பலரும் இவரை The real hero என்று புகழ்ந்தனர்.

ஸ்டீபன் தனது கொலைத் திட்டம் தோல்வி அடைந்ததால் விரக்தியுற்றவரானார். பின்னர் கைத்துப்பாக்கியால் தன் பெற்றோரைச் சுட்டுக் கொலை செய்தார்.

இவரை கைது செய்து பொலிசார் மேன்சஸ்டர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் இவர் குற்றவாளி என்பதை நீதிமன்றம் உறுதி செய்தது. இன்று இவருக்கு தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top