
பாகிஸ்தானை சேர்ந்த பாஷ்டே சயீத் கான் என்பவரை பலவந்தப்படுத்தி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட பின்னர் அவரை கொலை செய்து விட்டதாக ஏமன் நாட்டை சேர்ந்த முகம்மது ரஷத் கைரி உசேன் மீது ரியாத் நீதிமன்றில் நடைபெற்ற விசாரணையில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து, ரியாத் நகருக்கு தெற்கில் உள்ள ஜிசான் நகரில் நேற்று அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
முதலில் அவரது தலையை வெட்டி துண்டித்த பின்னர், சிலுவையில் அறைந்து வைத்ததாக இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டில் இது வரை 28 மரண தண்டனைகள் சவுதி அரேபியாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக