புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இளம்பெண்ணுக்கு திருநங்கையை திருமணம் செய்து வைத்து மோசடி செய்தது தொடர்பாக 6 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி பெண்ணின் தாயார் எஸ்.பியிடம் புகார் கொடுத்துள்ளார்.அந்த
புகார் மனுவில்:-

என் மகளுக்கு 22 வயது ஆகியும் திருமணம் நடக்கவில்லை. பல இடங்களில் மாப்பிள்ளை தேடிவந்தும் பலனில்லை. இந்நிலையில் வேலூர் அடுத்த சதுப்பேரி கிராமத்தை சேர்ந்த மகேஷ் (பெயர் மாற்றம்) அவரது குடும்பத்தினருடன் பெண் கேட்டு மார்ச் மாதம் என் வீட்டுக்கு வந்தனர். மாப்பிள்ளை சுயதொழில் செய்து கைநிறைய சம்பாதிப்பதாகவும், அதனால் உங்கள் பெண் நல்லமுறையில் வாழ்வாள் என்  கூறினர். மேலும் சதுப்பேரி கிராமத்தை சேர்ந்த பிரமுகர் ஒருவர் மகேசுக்கு உங்கள் பெண்ணை திருமணம் செய்து வைக்கலாம் என்றார். இதனையடுத்து மகேசுக்கும் திருமணம் நடந்தது.அன்று இரவு நடந்த முதரலிரவில் மகேஷ் திருநங்கை என்பது என் மகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து சில நாட்கள் நரக வாழ்க்கை அனுபவித்த என் மகள் அவருடன் வாழ முடியாது என கூறி என் வீட்டுக்கே வந்து விட்டார்.

இதை தொடர்ந்து மகேஷ் மற்றும் அவரது அண்ணன்களிடம் நியாயம் கேட்டதற்கு அவர்களிடம் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை. எனவே திருநங்கைக்கு இளம்பெண்ணை திருமணம் செய்து வைக்க துணையாக இருந்த மகேஷ் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுத்து திருமண செலவு தொகை ரூ.3 லட்சமும், சீர்வரிசைப் பொருட்களையும் மீட்டு தர நடவடிக்ககை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார்.இது குறீத்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top