புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஐ.பி.எல் தொடரின் 51வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 6 விக்கெட்களை வித்தியாசத்தில்
வீழ்த்தியது. முன்னதாக டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் டேவிட் ஹுசி முதலில் பௌலிங் செய்ய தீர்மானித்தார்.


இதனையடுத்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 189 ரன்களை எடுத்தது.  பெங்களூர் சார்பில் கெய்ல் 33 பந்துகளில் 61 ரன்களையும்,புஜாரா 48 பந்துகளில் 51 ரன்களையும், டி வில்லர்ஸ் 19 பந்துகளில் 38 ரன்களையும் எடுத்தனர். பஞ்சாப் சார்பில் கோணி 4 ஓவர்கள் பந்துவீசி 41 ரன்களை விட்டுகொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

190 ரன்களை விரட்டிய பஞ்சாப் அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 194 ரன்களை எடுத்தது,டேவிட் மில்லர் அபாரமாக விளையாடி சதம் அடித்தார் 38
பந்துகளில் 101  ரன்களையும், சதீஷ் 18 பந்துகளில் 27 ரன்களையும் எடுத்தனர். பெங்களூர் சார்பில் ரம்பால் 4 ஓவர்கள் பந்துவீசி 27 ரன்களை விட்டு கொடுத்து 1
விக்கெட்டையும், முரளி கார்த்திக் 3 ஓவர்கள் பந்துவீசி  24 ரன்களை விட்டு கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top