புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அமெரிக்காவில் மேற்கு மிச்சிகனை சேர்ந்த பெண் ஒருவர், பேஸ்புக் அக்கவுண்ட் ஒன்றை திறந்து தன்னை தானே மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.


செரில் நெல்சன் என்ற இந்தப் பெண், கிரான்ட்ஷ் ராப்பிட்ஸ் பகுதியை சேர்ந்தவர். அங்குள்ள போலீஸிடம் அவர் புகார் ஒன்றை செய்தார். அதில், யாரோ ஒரு ‘நபர்’ பேஸ்புக் அக்கவுண்ட் ஒன்றில் தமக்கு மிரட்டல் விடுத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இவர் குறிப்பிட்ட பேஸ்புக் அக்கவுண்ட்டில் இருந்த விபரங்கள், இவரது முன்னாள் பாய்பிரண்ட்டின் அடையாளங்கள். அந்த முன்னாள் பாய்பிரண்டுக்கு ஒரு இன்னாள் கேர்ள்பிரண்ட் உண்டு. அந்தப் பெண் இவரை மிரட்டுவது போல பேஸ்புக் பக்கத்தில் ஸ்டேட்டஸ்கள் போடப்பட்டு இருந்தன.

மிச்சிகன் போலீஸ் இது தொடர்பாக விசாரித்தபோது, குறிப்பிட்ட பேஸ்புக் அக்கவுண்ட்டை திறந்த நபரே, புகார் கொடுத்த அம்மணி என்று தெரிய வந்துள்ளது. அதையடுத்து, போலீஸை திசைதிருப்ப தவறான தகவல் கொடுத்த குற்றத்துக்காக அவர் தண்டிக்கப்பட உள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top