புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கோவை அருகே சித்திரை மாதத்தில் பிறந்த குழந்தையுடன் கணவன்,மனைவி வீட்டிற்கு சென்றனர். அப்போது அவர்கள் இருவரையும் நுழையவிடாமல் தடுத்த தந்தையை உலக்கையால்
அடித்து மகன் கொலை செய்தார்.

அதை தடுத்த தாய் படுகாயமடைந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் அன்னூர் பாசக்குட்டையை சேர்ந்தவர் ராமசாமி(62) விவசாயி. இவரது மனைவி கமலம்(54). இவர்களது மகன் கணேசமூர்த்தி(36), டீக்கடை நடத்தி வருகிறார். மருமகள் ராஜேஸ்வரிக்கு கடந்த 5 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.

மருத்துவமனையிலிருந்து குழந்தையுடன் கடந்த 3ம் தேதி ராஜேஸ்வரி மாமனார் வீட்டுக்கு வந்தார். அவருடன் கணவர் கணேசமூர்த்தி, தந்தை சின்னசாமி ஆகியோர் உடன் வந்தனர். அப்போது வீட்டிலிருந்த மாமி யார் கமலம், மாமனார் ராமசாமி, Ôசித்திரை மாத த்தில் குழந்தையை தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வராதே‘ என கூறி வரவிடாமல் தடுத்துள்ளனர்.

இதனால் கணேசமூர்த்திக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து தந்தை ராமசாமியிடம் ‘சொத்தை பிரித்து கொடு நாங்கள் தனியாக சென்று விடுகிறோம்‘ என்று கணேசமூர்த்தி கூறியுள்ளார்.

இதனால் மகன், பெற்றோரும் மோதி கொண்டனர். ஆத்திரமடைந்த கணேசமூர்த்தி உலக்கையால் தந்தை ராமசாமியின் தலையில் அடித்தார். அதை தடுத்த தாயையும் அடித்தார். இதில் படுகாயம் அடைந்த ராமசாமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். கமலம் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கணவன்,மனைவி கைக்குழந்தையுடன் வெளி மாநிலத்திற்கு தப்பியோடியதாக கூறப்படுகிறது.அன்னூர் போலீசார் வழக்கு பதிந்து கணேசமூர்த்தி, ராஜேஸ்வரி, சின்னசாமி ஆகியோரை தேடி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top